லொத்தர் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த கப் ரக வாகனம்! முதியவர் பலி
மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது மாலிம்படை, மஹதூவ சந்தியில் நேற்று(14.2.2026) இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக வந்த கப் ரக வாகனம் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த லொத்தர் விற்பனை நிலையத்துக்குள் புகுந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தின் போது விற்பனை நிலையத்துக்குள் இருந்த தெலிஜ்ஜவில பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபர் படுகாயமடைந்தார்.
அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கப் வாகனத்தின் சாரதியை மாலிம்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.