அநுரவை பதவி விலகுவதற்கான சுப நேரம்! எதிர்க்கட்சிகளுக்கு திலித் ஜயவீர பகிரங்க அழைப்பு
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியில் இருந்து விலகுவதற்கான சுப நேரத்தை நாங்களே தீர்மானிப்போம்" என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
எரிவாயு விநியோகக் கட்டமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இந்த அரசு ஜனநாயகத்துக்குப் புறம்பாகச் செயற்பட்டு வருகின்றது.

அரசின் பலவீனமான நிர்வாகத்தால்தான் நாட்டில் தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைச் சாட்டி, தமது நிர்வாகத் தவறுகளை மறைக்க அரசு முயற்சிக்கின்றது. ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான சுப நேரத்தை நாங்கள்தான் அவருக்கு வழங்குவோம்.
தற்போதைய நெருக்கடி
எனவே, இந்த அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் நிபந்தனைகளின்றி ஒன்றிணைய வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசில் பல ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் நாட்டுக்காக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.