யாழில் தவறான முடிவெடுத்து முதியவர் உயிர்மாய்ப்பு
யாழில் மனவிரக்தியடைந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம்(21) உயிர்மாய்த்துள்ளார்.
மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கதிர்வேல் (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இன்று நண்பகல் வீட்டுக்கு அருகேயுள்ள வேப்பமரத்தில் உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
காங்கேசன்துறை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam