யாழில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் சடலமாக மீட்பு
யாழ். வடமராட்சி அல்வாய் மேற்கு - ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கந்தையா கணபதிப்பிள்ளை (வயது 86) என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் நேற்று(12) காலையில் இருந்து கூக்குரல் இட்டவாறு இருந்துள்ளார்.
பின்னர் சத்தம் கேட்காது இருந்த நிலையில் அயலவர்களால் கிராம அலுவலர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வயோதிபர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்கு நேற்று இரவு சென்ற பருத்தித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணை செய்து உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
