யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அநுர எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Ashoka sapumal rangwalla
By Shadhu Shanker Dec 13, 2024 08:27 AM GMT
Report

எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது

மக்கள் ஆணையின் அர்த்தம்

அரச ஊடக பிரதானிகளுடன் இன்று(13) காலை நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.


இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்நாட்டு மக்கள் பல்வேறு அரசாங்கங்களை தெரிவு செய்தனர். பல அரசாங்கங்களை கவிழ்த்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நாட்டு மக்கள் இரண்டு சந்தர்ப்பங்களின் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் அர்த்தம் மற்றும் நோக்கம் என்னவென்பது தொடர்பிலான ஆழமான சிந்தனை எமக்கு உள்ளது.

கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் - சிக்கப்போகும் வவுனியா நபர்

கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் - சிக்கப்போகும் வவுனியா நபர்

எமது அரசாங்கம்

தரமான மற்றும் நிலையான நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர். அந்த சிறப்பான நம்பிக்கை கடுகளவிலும் சிதைந்து போவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அநுர எச்சரிக்கை | Anura Dissanayake Warns Of Strict Action

நாட்டுக்குள் தவறு செய்கின்ற எவரையும், எந்த காரணத்துக்காகவும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. நாட்டுக்குள் மட்டுமன்றி எமது அரசாங்கத்தினுள் எந்த தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதற்கு நாம் தயங்கப்போவதில்லை.

அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான சந்தர்ப்பத்தில் அதனை மேற்கொள்வதற்கும் நாம் இரு முறை சிந்திக்கப்போவதில்லை.

ஏழு தசாப்தங்களாக ஏமாற்றங்களுக்கு உள்ளான மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கவும், இந்த நாட்டை மிகச் சிறந்த நாடாக மாற்றுவதற்கும் தான் நிபந்தனைகளின்றி அர்ப்பணிப்போம்” என தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்தப்படும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்கள்

உறுதிப்படுத்தப்படும் சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW                          

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US