கனடாவில் இருந்து இலங்கை வந்த பார்சலில் சிக்கிய மர்மம் - சிக்கப்போகும் வவுனியா நபர்
கனடாவில் இருந்து கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி கப்பலில் வந்த கொள்கலன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடக செயலாளர் மேலதிக பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
போதைப்பொருள்
இந்த கஞ்சா கையிருப்பு வவுனியா மற்றும் களுத்துறை முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
களுத்துறை தெற்கு பகுதியில் உள்ள ஒருவருக்கு வந்த பார்சல் ஒன்றில் 08 டின் கஞ்சா இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பொதியின் எடை 5,324 கிராமாகும்.
வவுனியாவில் உள்ளவருக்கு வந்த பார்சலின் எடை 1755 கிராம் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலதிக விசாரணை
இதன் சந்தை மதிப்பு தனித்தனியாக 31,994,000 மற்றும் 10,530,000 ரூபாவாகும்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பு மேலதிக விசாரணை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
