யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் உயிரிழப்பு
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் நேற்றையதினம்(11.03.2025) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது 7ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த 8ஆம் திகதியன்று வீதியில் நின்றுகொண்டிருக்கும் போது, பாண் பெட்டியை கட்டியவாறு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த முதியவர் மீது மோதியது.
மரண விசாரணைகள்
இந்நிலையில், முதியவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அன்றையதினமே மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
