யாழில் பேருந்தில் பயணித்த முதியவர் திடீரென உயிரிழப்பு!
தனியார் பேருந்தில் சுழிபுரத்தில்(Chulipuram) இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணியொருவரின் வாயிலிருந்து நுரை வெளிவந்த நிலையில் நேற்றையதினம்(16)திடீரென உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் வயது (71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று காலை 10.30 மணி அளவில் 782 வழித்தட பேருந்தில், சுழிபுரத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்ட போது அவருக்கு இடைவழியில் வாயில் இருந்து நுரை வெளியேறியுள்ளது.
பின்னர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |