பதவி விலகியுள்ள கனேடிய நிதியமைச்சர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான(Justin Trudeau) கருத்து வேறுபாடு காரணமாக அந்நாட்டு நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்டு (Chrystia Freeland) பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றையதினம்(16) வருடாந்திர அரசாங்க நிதி அறிவிப்பை வழங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இவர் தனது பதவி விலகல் கடிதத்தை ட்ரூடோவுக்கு அனுப்பியுள்ளார்.
கருத்து மோதல்
கனடாவின்(Canada) வளர்ச்சிக்கான சிறந்த பாதை குறித்து ட்ரூடோவுடன் உடன்பாடு இல்லை என குறித்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரூடோ அரசின் மிக முக்கிய பொருளாதார ஆலோசகராக மேலும் இருக்க விரும்பவில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களில், கனேடியர்களுக்கு 250 கனேடிய டொலர் வழங்கும் திட்டம் குறித்து ஃப்ரீலேண்டு மற்றும் ட்ரூடோ இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டம் கனடாவால் ஏற்க முடியாத செலவை ஏற்படுத்தும் அரசியல் யுக்தியாக இருப்பதாக ஃப்ரீலேண்டு விமர்சித்திருந்தார்.
கனடாவின் பொருளாதாரம்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பொருட்களுக்கு 25% வரி விதிப்பது குறித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
"இந்தப் பிரச்சனை கனடாவுக்கு பெரும் சவாலாக இருக்கும்" என்று ஃப்ரீலேண்டு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2020-ல் நிதியமைச்சராக பதவி ஏற்ற ஃப்ரீலேண்டு, கோவிட்-19 பேரிடரின் போது கனடாவை வழிநடத்த முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகியபோதும்,நாடாளுமன்ற உறுப்பினராக தொடரவும், எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன!](https://cdn.ibcstack.com/article/9eb08b4d-21ab-4ae2-8dcb-ad1683c90764/24-675f331c998c6-md.webp)
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 23 மணி நேரம் முன்
![குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள்](https://cdn.ibcstack.com/article/cc6f9c8e-42d1-4573-8332-48af54f292a3/24-676000f4792a5-sm.webp)
குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள் Manithan
![இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு](https://cdn.ibcstack.com/article/dd0b4620-defd-41b4-849e-37cb1d8ad5a1/24-67600e3291002-sm.webp)
இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு News Lankasri
![பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்.. ரூ.55 லட்சத்தை கைப்பற்றிய போட்டியாளர்.. யார் தெரியுமா! இதோ](https://cdn.ibcstack.com/article/865c8312-1405-4741-9390-07c1d06691dc/24-675fa2849d071-sm.webp)