குளத்திற்கு சென்ற வயோதிபர் பரிதாப மரணம்
குருநாகல்- ஹுதலியாவ குளத்துக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(9) இடம்பெற்றுள்ளதாக கோட்டவெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்லகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபரே இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
மேற்படி வயோதிபர் இரவு நேரத்தில் குளத்துப் பகுதிக்குச் சென்ற போது வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதன் பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.