யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில்(Jaffna) விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் இன்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த நடராசா நாகராசா என்ற 76 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 8ஆம் திகதி அவரின் மகள் வீட்டுக்கு செல்வதற்காக கல்வியங்காடு - ஜமுனா வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ள நிலையில் ஓய்விற்காக அந்த வீதியில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்த போது அவருக்கு அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது கல்வியங்காடு பகுதியில் இருந்து வந்துகொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியபோது, குறித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டியில் நின்ற நபர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
முதியவர் உயிரிழப்பு
இந்நிலையில், விபத்தில் காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சிகிச்சையின் பின் 10.12.2024 அன்று வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |