கிளிநொச்சியில் கோர விபத்து- குழந்தை பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்
கிளிநொச்சியில்(Kilinochchi) சம்பவித்த கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றிரவு(25) 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனமொன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவர் படுகாயம்
A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம் பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.
குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர்.மேலும், சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
