தமிழர் பகுதியில் குளத்திற்கு குளிக்கச் சென்ற முதியவருக்கு நேர்ந்த துயரம்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் குளத்திற்கு குளிக்கச் சென்ற முதியவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(29.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீராடச் சென்றவர் உயிரிழப்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், 63 வயதுடைய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்பு குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து முதியவரின் சடலம் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri