மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு! முதியவர் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி
மட்டக்களப்பு திறந்த நீதிமன்றில் தனக்கு சாதகமாக நீதி வழங்காவிடில் உயிரிழப்பேன் என தெரிவித்த முதியவர் ஒருவர் நீதிமன்ற கட்ட தொகுதிக்கு அருகிலுள்ள வீதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(13.11.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மட்டுநகர் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 66 வயதுடைய கதிர்காமத்தம்பி குணசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணிப் பிரச்சினை
இது பற்றி தெரியவருவதாவது கடந்த 2022ம் ஆண்டு மார்ச்; 24 ம் திகதி புதுக்குடியிருப்பில் உள்ள காணி ஒன்று தொடர்பாக உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே காணிப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டது.
இதன் காரணமாக அடிபிடி இடம் பெற்றதை அடுத்து பொலிசார் குறித்த நபர் உட்பட 6 பேரை அப்போது கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இடம் பெற்று வந்த நிலையில் வழக்கு நேற்றுமுன்தினம் (12) திறந்த நீதிமன்றில் இடம்பெற்று அதற்கான தீர்ப்பு திகதியை நீதவான் அறிவித்த போது குறித்த நபர் நீதிமன்றில் கையை உயர்த்தி தீர்ப்பு தனக்கு சாதகமாக வழங்க வேண்டும் இல்லையேல் தவறான முடிவெடுத்து உயிரிழப்பேன் என சத்தமிட்ட நிலையில் அவரை நீதிமன்ற பொலிசார் அங்கிருந்து வெளியேறினர்.
உயிரிழப்பு
இதனை தொடர்ந்து குறித்த நபர் சம்பவ தினமான நேற்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் நீதிமன்றத்துக்கு அருகே உள்ள வீதியில் மக்கள் நடமாட்டம் அற்ற நேரத்தில் தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார்.இதனையடுத்து அவர் தீயில் எரிந்ததை கண்டவர்கள் உடனடியாக பொலிசார் மற்றம் 1990 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, படுகாயமடைந்தவரை போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.