திருகோணமலையில் கட்டுத் துப்பாக்கியுடன் முதியவர் கைது!
திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்பொறுவ பகுதியில் காட்டுத் துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(17.5.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மல்பொறுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர் மல்பொறுவ பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்குள், வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த போதே கோமரங்கடவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.