மட்டக்களப்பில் வயது முதிர்ந்த தம்பதி எடுத்த விபரீத முடிவு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் வயது முதிர்ந்த கணவன்- மனைவி இருவரும் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(12.01.2026) இரவு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய அன்டனி சில்வெஸ்டர், அவரது மனைவியான 73 வயதுடைய மேரி ஜெர்மைன் என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபரீத முடிவு
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த முதியவரான பெண் தாயார் தீராத நோய் காரணமாக கட்டிலில் படுத்த படுக்கையில் இருந்து வந்துள்ளார்.

அவரைப் பராமரித்து வந்த தந்தையார், சம்பவ தினத்தில் இரவு 6.00 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும், அதன் பின்னர் தானும் விஷம் உட்கொண்டு, மனைவிக்கும் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இறந்த நிலையில், அவருடைய மகள் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தற்போது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam