இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்
எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மழைப்பொழிவு
மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.

அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்த பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது.
புவி வெப்பமடைதல்
படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது என்றுள்ளார்.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri