தீவிரமடையும் 'எல்-நினோ' தாக்கம்: இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயம்!
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அடுத்த மாதம் உருவாகக்கூடிய 'எல்-நினோ' காலநிலை மாற்றம், இம்முறை மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை சாதாரண அளவை விட அதிகரிப்பது 'எல்-நினோ' எனவும், வெப்பநிலை குறைவது 'லா-நினா' எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் "எல்-நினோ தென் அலைவு" (ENSO) என அழைக்கப்படும் நிலையில், இது வளிமண்டலத்தின் இயல்பான காற்று வீசும் திசையை மாற்றியமைக்கிறது.
பொதுவாக எல்-நினோ நிலைமை 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் என வளி மண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
பசிபிக் பிராந்தியத்தில் இது உருவான பின்னர், அதன் வெப்பமான சூழல் 8 முதல் 11 மாதங்கள் வரை நீடிக்கும் என்றும், இதன் உச்சக்கட்ட தாக்கம் பெரும்பாலும் டிசம்பர் மாதத்திலேயே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த எல்-நினோ தாக்கத்தின் காரணமாக, வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறைந்து, வெப்பமான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
எவ்வாறாயினும், செப்டம்பர் மாத இறுதியில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், எதிர்பார்த்த மழை செப்டம்பர் மாதத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தீவிர எல்-நினோ நிலவிய கடந்த காலங்களில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் மழைவீழ்ச்சி அதிகரிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவதும் இந்த மாதங்களில்தான் என்பதால், அக்காலப்பகுதியில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் எனம் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை மூலம் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளான வடமேல், மேல், சபரகமுவ மாகாணங்களுக்கும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் அதிக மழை கிடைக்கப்பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஆனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும், மத்திய மலைநாட்டின் கிழக்குச் சரிவில் உள்ள மாத்தளை மாவட்டத்திற்கும் இப்பருவமழை மூலம் குறைந்த அளவே மழை கிடைக்கிறது.
ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் இப்பருவமழைக் காலத்தில், எல்-நினோ தாக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழை குறைவாகவே இருக்கும். தற்போது எல்-நினோவினால் இந்த வறட்சி மேலும் அதிகரிக்கவுள்ளது.
அத்துடன், இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை மாறுபாடும் இலங்கையின் காலநிலையை நேரடியாகப் பாதிக்கும் மற்றொரு காரணியாகும். உலகளாவிய ரீதியில் இந்த எல்-நினோ நிலைமை இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வறட்சியை அதிகரிக்கும்.
இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை குறையும் என்பதால், அங்கு விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இலங்கை தனக்குத் தேவையான பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
போதிய மழை இல்லாததால் இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் தங்களின் உணவுப் பாதுகாப்பைக் கருதி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தால், அது இலங்கையைக் கடுமையாகப் பாதிக்கும். இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றிலும் நேற்று தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், நீர் முகாமைத்துவத்திற்கான ஆயத்தங்கள் குறித்து பொறுப்பான துறைகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri