சாதனை அளவிலான எல் நினோ: கிழக்கு ஆப்பிரிக்கா - ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ள அபாயம்!
பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக வலுவடைந்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம் காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் உள்ள ஏழை நாடுகளில் கடுமையான வெள்ளம், பஞ்சம் மற்றும் நோய்ப் பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதாக சர்வதேச மீட்புக் குழு (IRC) எச்சரித்துள்ளது.
ஏற்கனவே வறட்சி, உள்நாட்டுப் போர்கள் மற்றும் நிதி நெருக்கடியால் தவித்து வரும் நாடுகளை இந்த இயற்கைச் சீற்றம் மேலும் நிலைகுலையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.
கடுமையான ஆபத்து
சர்வதேச மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி பாப் கிட்சன் இதுகுறித்துக் கூறுகையில், ஒரே நேரத்தில் பல அவசர நிலைகள் ஒன்றிணைவதை நாம் காண்கிறோம் என்றும், இதில் மற்றொரு அதிர்ச்சியைத் தாங்கும் திறன் மிகக் குறைவாக உள்ள நாடுகளே எல் நினோவின் நேரடி இலக்காக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளும், ஆசியாவில் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இதனால் மிகக் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.
அமெரிக்க காலநிலை கணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்த எல் நினோ 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகச் சக்திவாய்ந்த இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக மாறுவதற்கு 81 சதவீத வாய்ப்புகள் உள்ளன.
இது இந்த ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் தனது உச்சக்கட்ட தீவிரத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் நீரின் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக காலநிலை ஆய்வாளர் டேனியல் ஸ்வெய்ன் எச்சரித்துள்ளார்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri