ஈக்வடோா் சிறையில் மோதல்: 68 கைதிகள் பலி
தென் அமெரிக்க நாடான ஈக்வடோர் சிறைச்சாலையில் இடம்பெற்ற போட்டிக்குழுக்களுக்கு இடையிலான புதிய மோதல்களில் குறைந்தது 68 கைதிகள் கொல்லப்பட்டனா்.
இந்த மோதல்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த வன்முறையின்போது 25 போ் காயமடைந்தனா்.
ஏற்கனவே அங்கு செப்டம்பரில் போட்டி குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் பலியாகினா்.
இதுவே ஈக்வடோர் வரலாற்றில் இடம்பெற்ற வன்முறைகளில் மிக மோசமானதாக கருதப்படுகிறது.
அந்த நேரத்தில், சிறையின் ஒரு பிரிவில் இருந்து கைதிகள் வேறு பிரிவுக்கு செல்வதற்காக குழாய் வழியாக சென்று அங்கு அவர்கள் போட்டி குழுக்களின் உறுப்பினர்களைத் தாக்கினர்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த வன்முறையின் தொடா்ச்சியாக நேற்று சனிக்கிழமையன்றும் சிறைச்சாலையில் மேலும் வன்முறைகள் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.