நோன்புப் பெருநாள் தொடர்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டமையினால், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை (22) கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று ஆரம்பமானது. இதன்போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
You may like this Video
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




