முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
இலங்கையில் முட்டைகள் இன்று முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்காச் சோளத் தட்டுப்பாடு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக முட்டை உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, விலையை அதிகரிக்காமல் கைத்தொழிலை மேலும் தொடர முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
முட்டையின் விலை
ஏனைய விலங்குத் தீவனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

வெள்ளை முட்டையின் மொத்த விற்பனை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் மொத்த விற்பனை விலை 44 ரூபாவாகவும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
சில பிரதேசங்களில் முட்டையின் சில்லறை விலை தற்போது 50 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam