இறக்குமதி செய்யப்படும் முட்டை தொடர்பில் விசேட அறிவித்தல்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி பலிசுந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வழங்கப்படும் அறிவுறுத்தல்
குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுத்து நுகர்வோருக்கு வழங்கப்படும் போது அவற்றை மூன்று நாட்களுக்குள் நுகர்ந்து விட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன பெட்டிகளை கொண்ட விசேட கொள்கலன்கள் ஊடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முட்டை இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை வகைகள் கடந்த 25ஆம் திகதி முதல் சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றது.
சதொச நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் ஒரு முட்டையின் விலை 35 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
