முட்டையின் விலை உயர்வு! பாதிப்பில் நுகர்வோரும் வியாபாரிகளும் - செய்திகளின் தொகுப்பு (Video)
முட்டைக்கான சரியான விலையை நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்து நடைமுறைப்படுத்தாததால் வர்த்தகர்களும் நுகர்வோரும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் சில்லறை விலை 43 ரூபாவாக இருந்தாலும், நாடு பூராகவும் முட்டை வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவது பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.ஐ.ஏ.எம். ஞானதிலக்க தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகுவதால் முட்டைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய அதிகாரிகளிடம் முட்டை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
