முட்டை விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!
முட்டையின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விலைக் குறைப்பு
பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டை விலைகளைக் குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் நவோத் சம்பத் பண்டாரா தெரிவித்தார்.
அதன்படி, வெள்ளை முட்டையை ரூபா 18 விலையிலும், சிவப்பு முட்டையை ரூபா 20 விலையிலும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.
இதற்கிடையில், சந்தை நடத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முட்டைகளின் விலையைக் குறைப்பது ஆபத்தான செயல் என்று அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
