முட்டையின் சில்லறை விலையை 40 ரூபாவாகக் குறைக்க முடியும்
முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாகக் குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ(Nalin Fernando) தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையைக் குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டைக்கு தேவை அதிகம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் பண்டிகைக் காலம் ஆரம்பிப்பதால், கேக் தயாரிப்பாளர்களுக்கு அதிக அளவு முட்டைகள் தேவைப்படும்.

எனவே போதுமான அளவு முட்டைகள் இல்லையென்றால், அவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார்.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் மூன்று நாள்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri