கல்வி தான் உங்களை சிறுத்தையாக மாற்றும்: சிறீதரன் எம்.பி
வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் வலுவாக இருந்தால், தோல்வியால் உங்களை ஒருபோதும் வெல்ல முடியாது. ஆகவே, கல்வியைச் சுமையாகக் கருதாமல் உங்கள் சிறகுகளை விரிப்பதற்கான சக்தியாகப் பாருங்கள்" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமல்ல. அது உங்கள் குணாதிசயத்தைச் செதுக்கும் ஒரு கருவி.
நம்பிக்கை
ஆடு ஆடாக இருந்தால் வெட்டப்படும், அதுவே சிறுத்தையாக இருந்தால் யாராவது நெருங்க முடியுமா. நீங்கள் சிறுத்தையாக மாறுவதற்கு இருக்கும் ஒரே வழி கல்விதான்.

எனவே உங்கள் கனவுகளைப் பெரிதாகக் காணுங்கள். உங்கள் உழைப்பால் அந்த கனவுகளை நனவாக்குங்கள். இந்தத் தேசம் உங்களை நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam