அரச பேருந்துகள் தொடர்ச்சியாக மாணவர்களை ஏற்றாது செல்வது தொடர்பில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை
வட மாகாண - முல்லைத்தீவு வலயப் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை அரச பேருந்துகள் தொடர்ச்சியாக ஏற்றாது செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு வலயத்திற்கு ஏற்பட்ட A9 வீதியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் ஏற்றாது செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மாணவர்களின் கற்பதற்கான உரிமையை பறிப்பதற்கோ அல்லது தடைகளை ஏற்படுத்துவதற்கோ துணை நிற்பதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
இதுகுறித்து, A9 வீதியில் பயணிக்கும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்கனவே ஏற்றாது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் உரிய தரப்பினர்களை நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளேன்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகமும் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டும்
இதுதொடர்பில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்வதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன தமது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆகவே மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படையாமல் இருப்பதற்கு உரிய தரப்பினர்
தமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்கப்
போவதில்லை என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
