இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு மத்தியில் லெபனான் ஜனாதிபதி சமாதானக் கொடி
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் தங்களது இருப்பைத் தக்கவைத்துள்ள நிலையில், பிண்ட் ஜபெய்ல் (Bint Jbeil) உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெடிபொருட்கள் மூலம் தகர்க்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்தள்ளன.
டயர் (Tyre), சைடான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் இஸ்ரேலிய கண்காணிப்பு ட்ரோன்கள் தாழ்வாகப் பறந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய இக்கட்டான போர்ச் சூழலுக்கு மத்தியில், ஜெசின் (Jezzine) மாவட்ட மேயர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்த லெபனான் ஜனாதிபதி, இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இராஜதந்திர நகர்வுக்கு நாட்டு மக்கள்
இஸ்ரேலுடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் நாட்டின் பலவீனம் அல்லது விட்டுக்கொடுப்புகளைக் குறிக்கவில்லை என்றும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சி என்றும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

தெற்கு லெபனான் மக்களின் உறுதியையும் ஒற்றுமையையும் பாராட்டிய அவர், ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்த இராஜதந்திர நகர்வுக்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் பின்னால் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அமைதியை மீட்டெடுப்பதற்கும் தேசிய ஒருமைப்பாடு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam