பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபர் : உடனடி நடவடிக்கை எடுத்துள்ள கல்வி அமைச்சர்
மாணவர்களுக்கு பொலித்தீனை உண்ணக் கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் சிலரை பொலித்தீன் மற்றும் பத்திரிகைகளை உண்ணுமாறு அதிபர் வற்புறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், உடன் நடைமுறைககு வரும் வகையில், கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ்பாகே வலயக் கல்விப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு ஏற்ற வகையில் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
