மார்ச் முதல் பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு
பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான பின்னணி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri