பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி: எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ள வாய்ப்பு
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய வாய்ப்பு ஒன்றை அந்தக்கட்சிக்கு கொடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கூட்டணி தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
ராமதாஸ், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியையும் அன்புமணி, பாரதீய ஜனதாக் கூட்டணியையும் விரும்புகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமது சொந்த மாவட்டத்தில் உள்ள சேலம் தொகுதியை விட்டுக்கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையிலான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |