கச்சத்தீவு விடயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்: தமிழக பாஜக தலைவர் குற்றச்சாட்டு
கச்சத்தீவு விடயத்தில் திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம் என தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 1974ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்த போது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. அதன் பிறகு பல முறை, மத்திய அரசில், அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கிக் கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மௌனம் மட்டுமே சாதித்துக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, தேர்தல் காலங் களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை எனவும் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கேள்வி
கச்சத்தீவை மீட்க கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி அரசு செய்தது என்ன? தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து சிறைபடுவதையும், சித்ரவதைக்கு ஆளா வதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? தமிழகத்துக்கு செய்து கொடுத்த சிறப்பு திட்டங்கள் என்ன? என கேட்டு, விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மௌனகுருவாக இருப்பது ஏன்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்தே பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவத, கச்சத்தீவை மோடி பத்திரமாக மீட்டார்: திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால் 80க்கும் மேற்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, தமிழக கடற்றொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்ற திமுக எடுத்த நடவடிக்கை வெறும் மௌனமே.
இலங்கை கடற்படை
கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை அரசால் தமிழக கடற்றொழிலாளர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, திமுக அன்றும் மௌனமாகத்தான் இருந்தது. அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் மோடி தான்.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகிறார்கள். ஒட்டுமொத்த பாரத நாடும், நமது கடற்றொழிலாளர்ளுக்கு உறுதுணையாக நிற்கிறது.
கச்சத்தீவை விட்டுக் கொடுத்து,தமிழககடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, ஐம்பது ஆண்டுகள்மௌனமாக இருந்து கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்துப் பேசும் ஸ்டாலின் சுயபரிசோதனை செய்ய வேண்டியம் நேரம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.
[4YU3ICL ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |