பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வலுவடைந்து வருகின்றது! சதுரங்க அபேசிங்க
நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வலுவடைந்து வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வலுவடைந்து வருவதால் மீண்டும் ஒரு அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
பொருளாதார முன்னறிவிப்பு
2023ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்போது கணிக்கப்பட்ட பொருளாதார முன்னறிவிப்புகளை விட தற்போதைய நிலை மிகவும் சாதகமாக இருக்கிறது.
கடந்த காலங்களில் 3.1 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, தற்போது 5 சதவீதத்தை எட்டியுள்ளது. அதேபோல் 15 சதவீதமாகக் கணிக்கப்பட்ட ஏற்றுமதிப் பங்களிப்பு தற்போது 17.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக இந்த ஆண்டில் ஏற்றுமதி வருமானம் 18.2 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் எதிர்மறையாக காணப்பட்ட நடைமுறைக்கணக்கு தற்போது நேர்மறையான நிலைக்கு மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri