மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியில் தீ விபத்து
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(30.05.2026) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடருந்து வீதி சந்தியில் அமைந்துள்ள வங்கி கிளை ஒன்றில் திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட பிரதேச வாசிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தீ விபத்து
தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடுமையான பிரயத்தனித்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிகாலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை.

மின்சார ஒழுக்கு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து விபரங்கள் மற்றும் சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.
சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam