பொருளாதார தடையின் முதல் கட்டம்! ரஸ்ய கப்பல் தடுத்து நிறுத்தம் (வீடியோ)
உக்ரைய்னுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து மொஸ்கோவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் ஒரு பகுதியாக இன்று ஆங்கில கால்வாயில் வைத்து, பிரான்ஸ், ரஸ்யாவின் கப்பல் ஒன்றை இடைமறித்தது.
சிற்றூந்துகளை ஏற்றிக்கொண்டு செய்ன்ட் பீட்டர்ஸ்பேக் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலையே பிரான்ஸ் காவல்துறையினர் வடக்கு பிரான்சில் வைத்து இடைமறித்தனர்.
போல்டிக் லீடர் என்ற இந்தக்கப்பல், 127 மீற்றர் நீளம் கொண்டது.

இந்தநிலையில், கப்பல் இடைமறிக்கப்பட்டமையை அடுத்து, பிரான்ஸில் உள்ள ரஸ்ய தூதரகம், பிரான்ஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரான்ஸ் அதிகாரிகளால், இந்த கப்பல் தடையை மீறியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைய்ன் மீதான தாக்குதல்களை அடுத்து, ரஸ்யாவுக்கு எதிராக அமரிக்காவும், ஐரொப்பிய ஒன்றியமும், இங்கிலாந்தும் தடைகளை விதித்துள்ளன ரஸ்ய பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.