ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! சம்பிக ரணவக
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் விடயங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாட்டலி சம்பிக ரணவக வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 43ம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக ரணவக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இதற்கு முன்னரும் 2001ம் ஆண்டுகளில் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது ரணில் விக்ரமசிங்கவினால் அதனை வெற்றி கொள்ள முடிந்தது. இம்முறையும் அவர் அதனை வெற்றி கொள்வார் என்ற நம்பிக்கை உண்டு.
அதற்கு அனைவரும் பிரதமர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த நெருக்கடிகள் தீராது போனால் நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு வெடிக்கும் என்றும் சம்பிக ரணவக எச்சரித்துள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
