விமான நிலையம் செல்ல முடியாமல் சிக்கி தவித்த வெளிநாட்டு தம்பதி - எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் செய்த காரியம்
இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய தம்பதியினர் எரிபொருள் பற்றாக்குறையால் விமான நிலையத்திற்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சம்பவம் கலேவெல, தலகிரியாகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முற்றாக மூடப்பட்டிருந்த நிலையில், கலேவெல, தலகிரியாகம ராஜபக்ஷ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்ற ரஷ்ய தம்பதியினர் உரிமையாளரைச் சந்தித்துள்ளனர்.
தாங்கள் ரஷ்யாவில் இருந்து இங்கு சுற்றுலா வந்ததாகவும், மீளவும் நாடு திரும்புவதற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு எரிபொருள் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், தனது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்ட போதிலும், ரஷ்ய தம்பதியினரின் தேவையை பூர்த்தி செய்ய முன் வந்துள்ளார்.

நாட்டின் நிலைமை குறித்து வருத்தம்
இதன்படி, எரிபொருள் பம்புகளை சேதப்படுத்தாதபடி உள் தொட்டிகளில் சில பாதுகாப்பான இருப்புக்களில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருளை அவர் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து ரஷ்ய சுற்றுலாப்பயணி தனது சேவை குறித்து திருப்தி தெரிவித்ததுடன், இது குறித்து தூதரகங்களுக்கும் அறிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் அவல நிலையை இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்கு உதவுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியும் நாட்டின் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்து எரிபொருளுடன் விமான நிலையம் நோக்கி சென்றதாக கூறப்படுகின்றது.

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam