எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Army Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis
By Murali Jun 01, 2022 12:24 AM GMT
Report

இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது.

இலங்கைஇராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு ஆயிரத்து 108 பேர் கடமையாற்றுகின்றனர்.

கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனத்தையே பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தின் வாடகைப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம் | Economic Crisis In Sri Lanka Army Fuel Wastage

200 லீட்டருக்கும் ​மேல் அவர்களுக்கு இலவசமாக எரிபொருள் 

அத்துடன் மாதமொன்றுக்கு 200 லீட்டருக்கும் ​மேல் அவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படுகின்றது. வாகனத்துக்கு சாரதியொருவரும், உதவியாளர் ஒருவரும் வழங்கப்படுகின்றது.

ஆனால் அனைத்து இராணுவ அதிகாரிகளும் இவ்வாறு கிடைக்கும் வாகனங்களை தங்கள் மனைவிமாரின் சொப்பிங் மற்றும் பிள்ளைகளின் பாடசாலைப் பயணங்களுக்கே பயன்படுத்துகின்றனர்.

அந்தந்த அதிகாரிகளின் தேவைகளுக்கு இராணுவத்தின் ரெஜிமண்ட் அல்லது முகாம்களின் வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் காரணமாக வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் அளவிலான எரிபொருள் இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களால் வீண் விரயம் செய்யப்படுகின்றது.

1330 மில்லியன் வருடாந்தம் இராணுவ நிதி

■ அந்த வாகனங்களுக்கான வாடகைக் கொடுப்பனவாக 1330 மில்லியன் வருடாந்தம் இராணுவ நிதியில் செலவிடப்படுகின்றது

■ அதற்கு மேலதிகமாக முகாம் அல்லது ரெஜிமண்ட் வாகனங்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் மேற்கொள்ளும் பயணங்களிலும் அதே அளவு எரிபொருள் வீண்விரயம் செய்யப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம் | Economic Crisis In Sri Lanka Army Fuel Wastage

விமானப்படை மற்றும் கடற்படை என்பவற்றிலும் இவ்வாறான வீண்விரயம் நடைபெறுகின்ற போதிலும் ஒப்பீட்டளவில் இராணுவத்தை விடவும் குறைந்தளவான எரிபொருளையே அவர்கள் விரயம் செய்கின்றனர்.

ஒட்டுமொத்த நாடும் எரிபொருள் பற்றாக்குறையால் திண்டாடிக் கொண்டு, அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வரை மூடப்படும் நிலையை எதிர்கொண்டிருக்க இராணுவத் தரப்போ பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் இராணுவ நிதியில் பெருமளவு பணத்தை இராணுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக வீண் விரயம் செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US