இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததால் இலங்கையில் ஏற்பட்ட நிலை! பொருளாதார நிபுணரின் எச்சரிக்கை
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடும் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் பொருட்களின் விலை அசாதாரணமாக உயர்ந்து வருகின்றது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு, மின் துண்டிப்பு, எரிவாயு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, தமிழகத்தில் இருக்க கூடிய பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான ஆனந்த் ஸ்ரீனிவாசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெகுஜனத்தின் வாழ்வாதர - பொருளாதார மேம்பாடுகளை விட்டு, இன-மத உணர்வு தூண்டுதலை மட்டுமே பிரதானமென ஒரு அரசு இயங்கினால் இந்நிலையை தவிர்க்கவே முடியாது என்பதற்கு, இலங்கையின் தற்போதைய சூழல் ஓர் எச்சரிக்கை.” என குறிப்பிட்டுள்ளார்.
வெகுஜனத்தின் வாழ்வாதர- பொருளாதார மேம்பாடுகளை விட்டு, இன-மத உணர்வு தூண்டுதலை மட்டுமே பிரதானமென ஒரு அரசு இயங்கினால் இந்நிலையை தவிர்க்கவே முடியாது என்பதற்கு, இலங்கையின் தற்போதைய சூழல் ஓர் எச்சரிக்கை.#Srilanka pic.twitter.com/CltpF3cHE5
— Anand Srinivasan (@anand_srini) March 17, 2022