ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படும் எதிர்க்கட்சிகள் - ரில்வின் சில்வா
எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை கூடிய விரைவில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு இணங்கியதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமும் பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அதிகாரம்
இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை கூடிய விரைவில் நடாத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றின் தீர்ப்பு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரம் என்பனவற்றின் அடிப்படையில் தேர்தல்கள் கூடிய விரைவில் நடத்தப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |