கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது, இன்று (25.10.2024) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஆளுநரின் பணிப்புரை
இதன்போது, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் .எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
