வியாபார அரசியலை முன்னெடுக்கும் ராதாகிருஸ்னன் தரப்பு: அனுஷா குற்றச்சாட்டு
கொள்கை அரசியலுக்காக உறுவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணியானது தற்போது வியாபார நோக்கிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றது என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பழைய முகங்களை அகற்றிவிட்டு, புதியவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.இந்த விடயத்தில் மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.
வியாபார அரசியல்
மலையக மக்கள் முன்னணி கொள்கை அரசியலைவிடுத்து வியாபார அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர்.
ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த அதேநிலைதான் தோட்டப்பகுதிகளில் இன்று காணப்படுகின்றது.
எனவே மலையக மக்களும் இன்று மாற்றத்துக்கு முழுமையாக தயாராகிவிட்டனர்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |