பொது நிதி தொடர்பில் கிழக்கு ஆளுநரின் கோரிக்கை
அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் தலைவர்களும் பொது நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் தலைவர்களும் பொது நிதியை முறையாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
வளப்பயன்பாடு
அத்துடன், நிறுவன மட்டத்தில் உற்பத்தித்திறன் உயர்வாக செயற்படுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
பொது நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ள கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் விரைவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |