யாழ். பாஷையூரில் கூறியதை கொழும்பில் மறந்த அநுர
கடந்த காலங்களில் இலங்கையினுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் இந்தியாவுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வது வழமையானது.
இந்த விஜயத்தின் போது ஈழத்தமிழர் விவகாரம் என்பது அந்த பேச்சு மேசையில் எதிரொலிக்கும். ஆனால் அநுர குமாரவினுடைய விஜயத்தில் ஈழத்தமிழர் விவகாரம் பற்றி பேசப்படவில்லை.
இந்நிலையில், அநுர குமார யாழ்ப்பாணம் பாஷையூரில் கூறிய பல விடயங்களை சுதந்திர தினத்தின் போது நினைவுகூரவில்லை. அத்தோடு, அநுரவினுடைய பேச்சினது உள்ளடக்கங்கள் மிகவும் துயரகரமான உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.
மேலும் தமிழ் மக்களை ஒடுக்குவதனுடைய உள்நாட்டுக் கொள்கையினுடைய நீட்சிதான் அநுரவினுடைய வெளிநாட்டுக் கொள்கை ஆகும்.
குறிப்பாக, தமிழர்களை இந்தியாவினுடைய கைக்கூலிகள் என்று சொல்லித்தானே ஜே.வி.பி 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியது என அரசறிவியல் ஆசான் மு. திருநாவுக்கரசு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan