மலையகத்திலும் பலத்த பாதுகாப்புடன் உயிர்த்த ஞாயிறு தின வழிபாடுகள்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மறுதினம் உயிர்த்தெழுந்ததை கொண்டாடும் வகையில் உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கிறிஸ்தவர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனை, (05) அன்று ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியில் உள்ள முக்கிய தேவாலயங்களில் நடைபெற்றது.
சிறப்பு ஆராதனை
சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்ற இந்த ஆராதனைக்கு, ஹட்டன் ஸ்ரீ குருச தேவாலயத்தின் தலைமை குருவான அருட்தந்தை எட்வின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார்.

மேலும் நுவரெலியா புனித பிரான்சி சவேரியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றது. அத்துடன் நானுஓயா புனித ரீட்டா அம்மாள் தேவாலயத்தில் பங்குத் தந்தை சற்குண ராஜா தலைமையில் உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது ஈஸ்டர் பண்டிகை ஆராதனை பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்துள்ளனர்.
மேலும், இராணுவம், பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் தேவாலயத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 22 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam