உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவாதத்தில் இருந்து நழுவும் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மெதுவாக நழுவிக் கொண்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த புதன் தொடக்கம் வௌ்ளி வரை நாடாளுமன்ற விவாதம் நடைபெற்றுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கும் இதில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் குறித்த நேரத்தில் உரையாற்றவில்லை.
கேலி பேச்சுகள்
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் தனக்கு முழு விபரங்களும் தெரியும் என்று அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், அவர் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளாமல் நழுவிக் கொண்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் கேலியாக பேசப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
