ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது கட்சி, நிற பேதங்களை களைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர்கள் இவ்வாறு ஊடகங்களிடம் கூறியதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு மணித்தியால பேச்சுவார்த்தை
ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனையடுத்தே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க உள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
