உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவோம்:இளங்குமரன் எம்.பி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் வெகு விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இது தொடர்பான உண்மையான நீதியை சட்டத்துறை மூலம் பெற்றுக் கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பான நீதியை நாங்கள் பெற்றுத்தர மாட்டோம் என பலர் கூறுகின்றனர்.
உண்மையான நீதியை சட்டத்துறை மூலம் பெற்றுக் கொடுப்போம்.அதற்கான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.அதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவு பெற்றுள்ளன.

வெகு விரைவில் குற்றவாளிகள் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள். நாங்கள் கூறிய அனைத்தையும் செய்வோம் ஊடக சுகந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது.
அப்பொழுது பல தமிழ் அரசியல் வாதிகளும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அதுவும் வெளிவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியலுக்காக செய்யப்பட்டது. மக்களின் கருத்தும் எமது கருத்தும் உள்ளது.
அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக மக்களை எவ்வளவு பகடைக்காய்களாக பயன்படுத்தினார்கள். இந்த மக்களுக்கு நியாயத்தை கூற வேண்டிய தேவை இருக்கின்றது. அது வெகுவிரைவில் வெளி வரும் எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri