இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் காதி நீதிபதி ஒருவர் கைது!
கம்பளை, கெலிஓயா பிரதேச காதி நீதிபதியொருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (21) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
விவாகரத்து வழக்கின் முடிவை விரைவுபடுத்தி அந்த முடிவை வெளியிடுவதற்காக, சந்தேக நபர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து 2 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வர்த்தகர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த காதி நீதவான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
